நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளரா? ஆம் எனில் இங்கே க்ளிக் செய்யுங்கள்

எங்களது கதை

நாங்கள் அப்ளிகேஷன்களை உருவாக்கும் வியாபாரத்தில் இருக்கிறோம்.

இந்த அப்ளிகேஷன்கள் வாயிலாக பொழுதுபோக்கை வழங்க விரும்பும் , தமது வாடிக்கையாளர்களுக்கு வசதியை அளிக்க விரும்பும் நமது நுகர்வோர்களுக்காக நாங்கள் தயாரிப்புகளை உருவாக்குகிறோம்.
இது நூற்றாண்டுகாலமாக தொடரும் கண்டுபிடிப்பு ஆகும் மேலும் இப்போது தொழில்நுட்பத்தின் வாயிலாக உங்கள் விரலை அலைபேசியில் முறையாக நகர்த்துவதன் மூலமாக விமான நுழைவுசீட்டுகளை பதிவு செய்வது எளிதாகி விட்டது, அதேபோல் வயதானவர்களின் வாழ்க்கையிலும் தொழில்நுட்பம் நல்ல முறையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது- அவர்கள் மருத்துவர்களிடம் சந்திப்புகளை அட்டவணைப் படுத்தலாம், மருந்து உட்கொள்வதற்கு முறையான நினைவூட்டல்கள் வைத்திருக்கலாம், நுழைவு சீட்டுகளை பதியலாம் மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை காண செல்லலாம்.
தகவல் தொழில்நுட்பத்தினால் இயக்கப்படும் உலக நாடுகளில் பெரிய நாடான நாம், நமது சொந்த மக்களுக்கான வசதியை அளிக்க தவறிவிட்டோம் என்பதை நாம் மெதுவாக உணர்கிறோம்.
நாங்கள் எங்களது வெளிநாட்டு வாடிக்கையாளர் வட்டத்தின் கருத்துக்கள் மற்றும் தேவைகளால் இயக்கப்படும் அப்ளிகேஷன்களை உருவாக்குகிறோம் மேலும் தங்களின் சொந்த பார்வையாளர்களால் பயன்படுத்தப்படக்கூடிய அப்ளிகேசன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை நாங்கள் உருவாக்குகிறோம் மேலும் இங்கே முக்கியமானது என்னவென்றால் அது அவர்களின் சொந்த மொழியிலேயே இருக்கும்.
வெளிநாட்டு மொழியில் (பொதுவாக ஆங்கிலம்) சரளமாக அல்லது வசதியாக இல்லை என்ற எளிய காரணத்தால் மட்டுமே பல இந்தியர்கள் தொழில்நுட்பம் மற்றும் நவீன மொபைல் புரட்சியின் அருமையான நன்மைகளை பயன்படுத்துவதிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார்கள் என நாங்கள் உணர்ந்தோம்.
தாங்கள் வசதியாக உணராத மொழியில் வங்கி அல்லது முன்பதிவு செய்யும் அப்ளிகேசன்களை பயன்படுத்தும்போது தவறு செய்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக நவீன சேவைகளை பயன்படுத்துவதற்கு மக்கள் விருப்பமான நிலையில் இல்லை.
மொழித்தடையின் காரணமாக, வியாபார அல்லது வசதி வழங்குபவரை அடைய முடியுமா மற்றும் நமது வயது முதிர்நதவர்களும், உள்ளூர்வாசிகளும் எவ்வாறு பயன்படுத்தலாம் – போன்றவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள இணைப்பு துண்டிப்பை நாங்கள் உணர்ந்துள்ளோம்!
நாங்கள் இந்திய மொழிகள் மற்றும் இந்திய மக்கள் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறோம்

நாங்கள் ஏன் “தேவ நாகரி” என்று அழைக்கப்படுகிறோம்?

தேவநாகரி – இந்த வார்த்தை இந்தியர்களின் இதயத்தையும் மனதையும் எதிரொலிக்கிறது. நம் மொழிகளில் பெரும்பாலானவை இந்த பண்டைய கையெழுத்து மரபு முறையில் இருந்து வரும் எழுத்து முறைமைகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் தேவநாகரி வழியாக நம் நண்பர்கள், குடும்பம் மற்றும் நாட்டவர்களுக்கு உதவ விரும்புவதுடன் புன்னகையையும் நாம் பார்க்க விரும்புகிறோம்.